தமிழகத்தின் முன்னாள் முதல்வர், அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர், ரத்தத்தின் ரத்தங்களுக்கு அம்மா என்றெல்லாம் கொண்டாடப்பட்ட ஜெயலிதாவின் மரணம் தொடர்பான சர்ச்சைகள் 6 ஆண்டுகளை கடந்து ஓயாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதுவும் இன்றைய தினம் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய நாள். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பலர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது, சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராம மோகனராவ், அப்போலோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இவர்கள் விசாரிக்கப்பட்ட வேண்டிருப்பதாக ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இவர்கள் அனைவரும் அரசியல் ரீதியாக, தங்கள் தொழில் ரீதியாக மிகப்பெரிய புள்ளிகள். இவர்களை விசாரணைக்கு அழைத்து வருவது என்பது சாதாரண விஷயமல்ல. இதற்கான நடவடிக்கைகளில் களமிறங்கும் முதல்வர் ஸ்டாலின் மிகவும் தீவிரமாக ஆலோசனை முடிவு எடுக்க வேண்டியது அவசியம். காவல்துறையில் குழு அமைத்தா? அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்தா? என்பதில் தொடங்கி சம்பந்தப்பட்ட நபர்களை எப்படி அழைப்பது அவர்களின் எந்த மாதிரியான விசாரணை நடத்துவது வரை பல விஷயங்களை திட்டமிட வேண்டி உள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அனைவரும் பெரிய புள்ளிகள் என்பதால் யாருமே உடனே விசாரணைக்கு ஆஜராக விரும்ப மாட்டார்கள். அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தின் மூலம் நேரில் ஆஜராகாமல் இருக்க விலக்கு கேட்பர். தங்கள் மீது கறை விழுந்து விடக்கூடாது என்று எண்ணி விலகி செல்லவே முயற்சி முயற்சி செய்வர். இதில் ஜெ.ராதாகிருஷ்ணன் தற்போது கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளராக பதவி வகித்து வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் குட் புக்கில் இடம் பிடித்துள்ளார். அதிகாரிகள் மட்டத்திலும் மிகவும் நேர்மையானவர் என பெயர் பெற்று விளங்கிறார். இவர் இந்த விஷயத்தை களங்கம் ஏற்படாமல் எப்படி கையாள போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனைப் போல அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி.ரெடிக்கு கிட்டத்தட்ட 90 வயது ஆகிறது. வயதில் மூத்தவரான இவரை எப்படி விசாரணைக்கு அழைத்து வருவர். நேரடியாக சென்றாலும் விசாரணை நடத்த அவரது எந்த அளவிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. இறுதியாக சசிகலா, விஜய் பாஸ்கர் ஆகியோர் அரசியல் ரீதியாக செல்வாக்கு பெற்று விளங்குகின்றனர். இவர்களை விசாரணைக்கு வரவழைப்பதும் எளிதான காரியமல்ல. எனவே முதல்வர் ஸ்டாலின் எத்தகைய விசாரணை உத்தரவிடப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறி உள்ளது.