Categories
தேனி மாவட்ட செய்திகள்

“மன உளைச்சல்” அலற வைத்த மாஜி ராணுவ வீரரின் செயல்…!!

கோழிக்கறிக் கடையில் தனது கையை தானே வெட்டி துண்டாக்கிய மாஜி ராணுவ வீரரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கே.கே.பட்டியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மாஜி ராணுவ வீரர். குடும்ப தகராறு காரணமாக இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் வெங்கடேசன் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் கோழிக்கறி கடைக்கு சென்ற வெங்கடேசன் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் கறி வெட்டும் கத்தியால் தனது இடது கையின் மணிக்கட்டில் நான்கு முறை வெட்டி துண்டாக்கியுள்ளார்.

இதனை பார்த்த கடையின் உரிமையாளர் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி விட வெங்கடேசன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதுகுறித்து காவல் துறையினருக்கு புகார் அளிக்க விரைந்து வந்த அவர்கள் துண்டான கையை எடுத்துக்கொண்டு வெங்கடேசனையும் பிடித்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு துண்டான கையை ஐஸ்பெட்டியில் வைத்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். மேலும் அவர் கையை துண்டாக வெட்டியது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |