Categories
அரசியல்

தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறோம்…. எங்களுக்கு பாதிப்பு இல்லை… அமைச்சர் ஜெயகுமார் பேட்டி…!!!

வருங்காலத்தில் அதிமுக கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்துவது தொடர்பில் பாஜக விருப்பம் தெரிவித்திருக்கும் நிலையில், கட்சித் தலைமை தான் அது குறித்து தீர்மானிக்கும் என்று ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் இட ஒதுக்கீடு பங்கு தொடர்பில் பேச்சுவார்த்தை உடன்படவில்லை. எனவே, பாஜக தனித்து போட்டியிட போவதாக அறிவித்திருக்கிறது. எனினும் பா.ஜ.க வின் தலைவர் அண்ணாமலை வரும் 2024ஆம் வருட பாராளுமன்றத்தின் தேர்தல் வரைக்கும் அதிமுகவுடன் எங்களின் கூட்டணி நீடிக்கும் என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில், பாஜகவின் இந்த தீர்மானம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருப்பதாவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடம் பங்கீடு குறித்து பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியவில்லை. எங்கள் இயக்கம் மிகப்பெரியது.

கட்சி மற்றும் கட்சியில் உள்ளவர்கள் நலன் பாதிக்காத விதத்தில் தான் இடப்பங்கீடு இருக்கும் என்று நான் தெரிவித்தேன். அந்த வகையில் அவர்களது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அவர்கள் ஒரு தீர்மானம் செய்திருக்கிறார்கள். அது அந்த கட்சியினரின் தீர்மானம், அதற்கு எங்களின் கருத்து ஒன்றும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பாஜகவுடன் எங்களின் கூட்டணி மேலும் தொடருமா? என்பதை கட்சி தான் தீர்மானிக்கும் என்று கூறியிருக்கிறார். மேலும், பலமுறை நாங்கள் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறோம். பாஜக-வின் இந்த முடியவால் எங்களுக்கு பாதிப்பு கிடையாது என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |