பொதுச்சொத்துகளை சேதப்படுத்திய வழக்கின் தண்டனையை முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது .
1998_ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் கள்ளச்சாராயம் காய்ச்சியத்தை எதிர்த்து மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர் . ஒரு கட்டத்தில் இந்த போராட்டத்தில் கல்வீச்சு , பொதுச்சொத்துகளை சேதப்படுத்தி தீவைப்பு வைப்பது என வன்முறை வெடித்தது. இது தொடர்பாக காவல்துறை 108 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை M.P,M.L.A_க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், விசாரித்ததில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை இரத்து செய்து , வழக்கை தடை செய்யவேண்டுமென்றுமுன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சரை பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் சென்னையில் உள்ள உயர்நீதிமன்ற வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சிறை செல்ல வேண்டிய தேவையில்லை என்று நீதிபதி கூறினார்.