Categories
அரசியல்

“அந்த கட்சி ஆபீஸ்ல தான் ஒளிஞ்சி இருக்காரு…. எனக்கு டவுட்டா இருக்கு”…. புரளிய கிளப்பிய கார்த்தி சிதம்பரம்….!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, டெல்லியில் இருக்கும் பாஜக அலுவலகத்தில் தலைமறைவாக உள்ளதாக சந்தேகம் எழுகிறது என்று கார்த்தி சிதம்பரம் கூறியிருக்கிறார்.

முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி, ஆவின் போன்ற அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறார். எனவே அவரை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் எம்பி, ராஜேந்திர பாலாஜி டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இருப்பார்  என்று தனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.

அதாவது தமிழக முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டின் காவல்துறையும் திறமை வாய்ந்தது. எனினும் தற்போது வரை முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை அவர்கள் ஏன் கைது செய்யவில்லை? என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவர் டெல்லியில் இருக்கும் பாஜக அலுவலகத்தில் இருப்பாரோ? என்று சந்தேகம் ஏற்படுகிறது. ஏனெனில், அங்குதான் காவல்துறையினர் செல்வதற்கு தயக்கம் காட்டுவார்கள் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |