பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் PTI கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்று கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டது. எனவே, இதற்கு பிரதமர் தான் காரணம் என்று கூறிய எதிர்க்கட்சியினர் ஒன்று சேர்ந்து இம்ரான்கான் மீது குற்றம் சாட்டி நம்பிக்கையற்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.
எனவே, பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் பதவியிலிருந்து நீக்கப்பட்டு விட்டார். தற்போது புதிய பிரதமரை நியமிக்கும் பணி நடக்கிறது. இந்நிலையில், தன் அமைச்சரவையில் இருக்கும் அனைவரும் பதவி விலகுமாறு இம்ரான்கான் தெரிவித்திருக்கிறார். அதற்கான பணிகள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.