இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் முன்னாள் அதிபரான சிறிசேனாவை, சந்தேகத்திற்குரிய நபராக நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.
இலங்கையில் கடந்த 2019 ஆம் வருடத்தில் ஈஸ்டர் பண்டிகையின் போது தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இதில் இந்தியாவை சேர்ந்த 11 நபர்கள் உட்பட 270 நபர்கள் உயிரிழந்தனர். ஐஎஸ் ஐஎஸ் அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள். ஈஸ்டர் பண்டிகையின் போது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் நாட்டின் முன்னாள் அதிபரான சிறிசேனாவை சந்தேகத்திற்குரிய நபராக நீதிமன்றம் நேற்று அறிவித்திருக்கிறது. அதாவது, தாக்குதல்கள் நடக்க இருப்பதாக, முன்பே அப்போது அதிபராக இருந்த சிறிசேனாவிற்கு உளவுத்துறை எச்சரித்திருக்கிறது.
அந்த எச்சரிக்கைக்கான அறிக்கைகளை அவர் புறக்கணித்து விட்டதாக கொழும்பு கோட்டை நீதிமன்றத்தை சேர்ந்த நீதிபதிகள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இந்த வழக்கில் வரும் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி அன்று முன்னாள் அதிபர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்று சமன் அனுப்பப்பட்டுள்ளது.