Categories
அரசியல் உலக செய்திகள்

சீனாவின் முன்னாள் ஜனாதிபதி மரணம்…. அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு…!!!

சீன நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான ஜியாங் ஜெமின் தன் 96 வயதில் நேற்று மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன நாட்டில் கடந்த 1989 ஆம் வருடத்தில் இருந்து 2004 ஆம் வருடம் வரை ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளராக மற்றும் 1993 ஆம் வருடத்தில் இருந்து 2003 ஆம் வருடம் வரை ஜனாதிபதியாகவும் இருந்தவர் ஜியாங் ஜெமின். ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டு ஷாங்காய் நகரத்தில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார்.

சமீப நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அவர் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகள் அனைத்தும் தோல்வியடைந்தது. எனவே, அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன அரசாங்கம் ஜியாங் ஜெமின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறது. மேலும் நாடு முழுக்க அரசாங்கத்தின் கட்டிடங்களில் அரை கம்பத்தில் கொடிகள் பறக்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories

Tech |