அருண் ஜெட்லி உடல்நிலை மேலும் கவலைக்கிடமாகி எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
ஆகஸ்ட் 9_ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் , பெரு நிறுவன விவகார துறை அமைச்சராகவும் இருந்தவர் அருண் ஜெட்லி. கடந்த தேர்தலில் கூட உடல்நலகுறைவு காரணமாக தனக்கு ஓய்வு வேண்டுமென்று தேர்தலில் போட்டியிடாமல் இருந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பாஜக_வின் முக்கிய தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தனர். நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , அமித்ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் மருத்துவமனை சென்று உடல் நலம் விசாரித்தனர். இந்நிலையில் அருண் ஜெட்லியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவருக்கு மூச்சு சீராக இருக்க எக்மோ சிகிச்சை கருவி பொருத்தப்பட்டு மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.