அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வுகளை நடத்த விரும்பினால் நடத்தலாம் என பல்கலைக்கழகங்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்ததால், முதற்கட்டமாக பள்ளி மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இறுதியாண்டு மாணவர்களைத் தவிர அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வு ரத்து என தமிழக முதல்வர் அறிவித்தார்.
இந்நிலையில் யுஜிசி விதிமுறைகளுக்கு உட்பட்டு முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்த விரும்பினால் பல்கலைக்கழகங்கள் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இறுதி செமஸ்டர் தேர்வுகள் மட்டுமே கட்டாயம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மற்ற செமஸ்டர் தேர்வுகளையும் அனைத்து மாணவர்களுக்கும் நடத்தவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தமிழகத்திலும் இது நடைமுறைப்படுத்தப்படுமா? என்று கேள்வி மாணவர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.