Categories
உலக செய்திகள்

உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்களுக்கு…. ரத்து செய்யப்பட்ட தேர்வு… வெளியான அறிவிப்பு…!!!!

உக்ரைன் நாட்டில் மருத்துவம் பயின்ற இறுதியாண்டு மாணவர்களுக்கு லைசென்ஸ் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உக்ரைன் அரசு ஐந்தாம் மற்றும் இறுதி வருட மருத்துவ மாணவர்களுக்கு KROK தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்த தேர்வு ரத்து செய்யப்படுவது பற்றிய தகவலை இந்தியாவிற்கு சென்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளன.

மூன்றாம் வருடம் பயிலும் மாணவர்களுக்கு KROK-1 தேர்வு, ஒரு வருடம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இறுதி வருடம் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு KROK-2 தேர்வு இல்லாமல் மருத்துவ படிப்பிற்குரிய சான்றிதழ் அளிக்கப்படும் என்று பல்கலைக்கழகங்கள் தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |