கோவை அரசு கலைக் கல்லூரியின் பருவ தேர்வுகள் நடைபெறும் தேதிகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் உள்ள அரசு கலை கல்லூரி தேர்வு நடைபெறும் தேதி குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வீரமணி கூறியுள்ளார். அதன்படி கோவை அரசு கலைக் கல்லூரியில் முதல் பருவத் தேர்வுகள் வருகின்ற 18ம் தேதி முதல் தொடங்குகிறது. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, வருகின்ற 25-ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி வரை முதலாம் மற்றும் இரண்டாம் பருவத் தேர்வுகள் நடைபெறும். இதனை அடுத்து இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு வருகின்ற 18-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நான்காம் மற்றும் ஆறாம் பருவ தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் மூலமே நடைபெறும் எனவும், தேர்வு கட்டணத்தை மாணவர்கள் ஆன்லைன் மூலம் செலுத்தலாம் எனவும் அறிவித்துள்ளார். மேலும் 1987 ஆம் ஆண்டு முதல் அக்கல்லூரியில் படித்து அரியர் வைத்திருப்பவர்களும் இந்த பருவ தேர்வுகளுக்கான கட்டணத்தை செலுத்தி அந்தந்ததேர்வுகளை எழுதலாம் எனவும், அதற்கான விவரங்களை www.gacbe.ac.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளார்.