Categories
கல்வி தேசிய செய்திகள்

மே 31ம் தேதி சிவில் சர்வீஸ் பணியாளர்களுக்கான தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் – யுபிஎஸ்சி அறிவிப்பு!

மே 31ம் தேதி சிவில் சர்வீஸ் பணியாளர்களுக்கான தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,933ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 392ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது இரண்டாவது முறையாக மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி நிறுவனங்கள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டள்ளது. இதனால் நாடு முழுவதும் இருக்கக்கூடிய கல்வி நிறுவனங்கள் அதன் விடுமுறையை மே.3-ம் தேதி வரை நீட்டித்து தேர்வுகளையும் ஒத்திவைத்துள்னர். இந்த சூழலில் மத்திய பணியாளர் தேர்வு வாரியமான யுபிஎஸ்சி தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், மே3-ம் தேதிக்கு முன்பாக திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள் அனைத்தும் ஜுன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதே சமயம் ஏற்கனவே மே 31-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த IAS, IPS, IFS, IRS உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணியாளர்களுக்கான திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், மாணவர்கள் தொடர்ந்து தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும் யுபிஎஸ்சி தரப்பில் அறிவிக்கப்பட்டள்ளது. மேலும் மே3-ம் தேதிக்கு பிறகு நடைபெறும் தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் தகவல் அளித்துள்ளனர்.

Categories

Tech |