Categories
தேசிய செய்திகள்

“தாய் பாசத்திற்கு உதாரணம்” நாய் குட்டிக்கு பால் கொடுத்த பசு…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

பசு ஒன்று நாய் குட்டிகளுக்கு தாயாக மாறி பால் கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் நாய் ஒன்று குட்டிகளை ஈன்று விட்டு உயிரிழந்துள்ளது. இதனால் குட்டிகள் உணவுக்காக பரிதவித்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த குட்டி நாய்களுக்கு பசு ஒன்று தாயாக மாறி பால் கொடுத்துள்ளது. இதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் நெகிழ்ச்சி  அடைந்துள்ளனர். மேலும் அழகான இந்த காட்சியை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

நாய் குட்டிகளுக்கு பசு ஒன்று தாயாக மாறி பால் கொடுத்த இந்த சம்பவம் உத்தரபிரதேச மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வாயில்லா ஐந்தறிவு கொண்ட ஜீவன்களுக்கும் பாச உணர்வு உள்ளது என்பதை இந்த காட்சி எடுத்து காட்டுகிறது.

Categories

Tech |