Categories
மாநில செய்திகள்

எஞ்சியுள்ள 11ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படமாட்டாது: அமைச்சர் செங்கோட்டையன்

11ம் வகுப்பு மாணவர்களுக்கு எஞ்சியுள்ள ஒரு தேர்வு ரத்து செய்யப்படமாட்டாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு தீர்வு கண்டவுடன் 11ம் வகுப்புக்கு எஞ்சியுள்ள ஒரு தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் நீட் தேர்வுக்கு இன்று காலை 11 மணிக்கு நியூபாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் இலவசமாக ஆன்லைன் பயிற்சி வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேபோல நூலங்கங்களில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நேற்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். மேலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் 3வது வாரத்தில் நடத்த முடிவு செய்துள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக 11 வகுப்பு தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. ஊரடங்குக்கு முன்பாக 11ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், ஒரே ஒரு தேர்வு மட்டும் நடைபெறாமல் இருந்தது. மேலும், அந்த தேர்வு ரத்து செய்யாடலாம் என எதிர்பார்த்து வந்த நிலையில், ரத்து செய்யமுடியாது என அமைச்சர் கூறியுள்ளார். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |