Categories
அரசியல்

முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு….. இன்று மட்டும் 3 ஒப்பந்தம் கையெழுத்து …!!

லண்டன் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அங்கு இருக்கக்கூடிய தமிழ் அமைப்புகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு லண்டன் சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு  அளித்துள்ளார்கள்.இதை தொடர்ந்து முதல்வர் மூன்று நாட்கள் லண்டனில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்.புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுக்கின்றார். சுகாதாரத் துறை சார்ந்த பல்வேறு திட்டங்கள் கையெழுத்தாக இருக்கின்றன.இன்று மட்டும் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சுகாதாரத்துறை சார்பில் கையெழுத்தாகும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக  சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாக இருக்கிறது. டெங்கு , மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்களை முழுவதுமாக தமிழகத்தில் கட்டுப்படுத்துவதற்கு ஒரு நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் , லண்டனில் புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் என கையெழுத்துகின்றது. கிங்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் தன்னுடைய கிளைகளை நிறுவுவதற்கு அந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |