கனேடியர்கள் 72 மணி நேரத்திற்குள் வெளிநாடு சென்றுவிட்டு மீண்டும் நாடு திரும்பும் பட்சத்தில் கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய குடிமக்களில் முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 72 மணி நேரத்திற்குள் வெளிநாடு சென்றுவிட்டு மீண்டும் நாடு திரும்பும் பட்சத்தில் கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் நவம்பர் 30 முதல் இந்த விதிவிலக்கு நடைமுறைக்கு வரும் என்று கனடிய அரசு அறிவித்துள்ளது.
அதாவது கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள், இந்திய சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட தனிநபர்கள், முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட கனேடிய குடிமக்கள் உள்ளிட்டோர் வெளிநாடு சென்ற 72 மணி நேரத்திற்குள் மீண்டும் நாடு திரும்பும் பட்சத்தில் PCR சோதனை முடிவை சமர்பிக்க வேண்டிய அவசியமில்லை. அதேசமயம் தடுப்பூசிக்கு மருத்துவ முரண்பாடுகள் உள்ள நபர்கள் மற்றும் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த விதிவிலக்கு நீக்கப்படுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.