Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதீத பாசம்… ஒரு குடும்பமே செய்த காரியம்… சேலம் அருகே திகிலூட்டிய நான்கு பேர்..!!

சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம், பொன்னம்மாப்பேட்டை, வாய்க்கால் பட்டறை அருகே வால் கார்டு பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் சலூன் கடையில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கோகிலா. இந்த தம்பதியருக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மதன்குமார் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரின் பிரிவு அந்தக் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதன்குமார் இருந்து வாழ மனமில்லாமல் முருகன், கோகிலா மற்றும் இரண்டு மகன்கள் வசந்தகுமார் மற்றும் கார்த்திக் ஆகியோருக்கு நேற்று இரவு விஷம் கொடுத்து, தாங்களும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

காலை விடிந்து வெகுநேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகத்தில் அக்கம்பக்கத்தினர் கதவை தட்டி உள்ளனர். இருப்பினும் கதவு திறக்கவில்லை. பின்னர் போலீசாருக்கு தகவல் அனுப்பினர். அங்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது நான்கு பேரும் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரின் உடலை சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |