Categories
அரசியல் மாநில செய்திகள்

பரபரப்பு! 6 நாட்களுக்கு பிறகு…. சசிகலாவுக்கு மீண்டும் உயர்ந்த ரத்த அழுத்தம்…!!

சசிகலாவுக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது .

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வந்த சசிகலா தண்டனை காலம் முடிந்து கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆனார். இந்நிலையில் முன்னதாக சசிகலா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருடைய உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததது. மேலும் சசிகலாவுக்கு சுவாச முறை, ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு ஆகியவை சீராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

ஆனால் சர்க்கரை அளவு அவ்வ்வப்போது மாறுவதால் இன்சுலின் வழங்கப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் சசிகலாவுக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும் அதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது தகவல்கள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |