Categories
அரசியல் மாநில செய்திகள்

பரபரப்பு! முதலமைச்சர் கார் மீது…. மர்மநபர்கள் தாக்குதல்…!!

முதலமைச்சர் எடப்பாடியின் காரை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளர் . எனவே அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். இவர் முதன் முதலில் தன்னுடைய குலதெய்வக் கோயிலை வணங்கி விட்டு பின்னர் பரப்புரையை தொடங்கினார்.

இதையடுத்து நாமக்கல்லில் பரப்புரையை மேற்கொண்ட அவர் தற்போது திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் திருச்சி வரகனேரி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவருடைய கார் மேடை அருகே நிறுத்தப்பட்டிருந்துள்ளது. அப்போது முதலமைச்சர் காரை சிலர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |