திருச்செந்தூர் கடற்கரையில் பாதி புதையுண்ட நிலையில் முருகனின் சிலை கிடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான இரண்டாம் படைவீடு திருச்செந்தூரில் உள்ளது. இங்கு முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தைப்பூசம் போன்ற விழாக்களின்போது பக்தர்களின் கூட்டம் அலைமோதும். அப்போது கடற்கரை முழுவதும் பக்தர்கள் நிறைந்து காணப்படும். கடற்கரையில் பக்தர்கள் சென்று நீராடிவிட்டு பக்கத்தில் உள்ள நாழிகிணற்றில் மக்கள் புனித நீராடி விட்டு வந்து முருகனை தரிசிப்பர்.
இந்நிலையில் திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் கடந்த சில வாரங்களாக சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய முருகனின் கல்சிலை ஒன்று கடற்கரை மணலில் பாதி புதையுண்ட நிலையில் கிடக்கின்றது. ஆனால் இந்த மணல் பகுதியில் பாதி புதையுண்ட நிலையில் திடீரென காணப்படும் முருகனின் சிலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சிலையை சம்பந்தபட்ட அதிகாரிகள் மீட்க அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.