Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு!… டீ குடித்த 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி…. காரணம் என்ன…? பகீர் பின்னணி இதோ….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் நாக்லா கன்ஹாய் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சிவானந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவாங் (6), திவாயான்ஷ் (5) என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் வீட்டில் டீ குடித்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து சிவானந்தனின் மாமனார் ரவீந்திர சிங்கும், பக்கத்து வீட்டுக்காரர் சோப்ரான் ஆகியோரும் டீ குடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் டீ குடித்த சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரவீந்திர சிங் மற்றும் சிவாங், திவ்யான்ஷ் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து சிவானந்தன் மற்றும் சோப்ரான் ஆகியோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டத்தில் டீ தூளுக்கு பதிலாக தேநீரில் ரசாயன பொடியை மாறுதலாக போட்டது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |