Categories
உலக செய்திகள்

பரபரப்பு செய்தி…! மூன்றாம் “அழிவுக்கு” தயாராகும் ஜெர்மன்… “அச்சத்தில்” மக்கள்…!

ஜெர்மன் நகர் ஒன்றில் திடீர் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் மூன்றாம் அலை உருவாகிவிடுமோ என்று மருத்துவர்கள் அச்சம் கொள்கின்றனர்.

ஜெர்மன் ஃப்ளென்ஸ்பர்க் என்ற நகரில் நடுத்தர வயதினர் மற்றும் உடல்நலக்குறைவு இல்லாது  ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு புதிய தொற்றினால் உயிருக்குப் போராடும் நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து புனித பிரான்சிஸ் மருத்துவமனையின் தலைவர் கிளாஸ் டீமரிங்  தெரிவித்ததாவது, ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு புதிய திடீர் மாற்றம் பெற்ற B.1.1.7 என்ற பிரிட்டன் வகை கொரோனவைரஸ் தோன்றியுள்ளது.

இதனால் கொரோனாவின் மூன்றாவது அலை உருவாகலாம். மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலையும் உருவாகும் என்று அஞ்சுவதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொரோனா குறுகிய காலத்தில் ஏராளமானோருக்கு பரவுவதாக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இதனால் தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றினாலும் தற்போது இருக்கும் சூழலில் கொரோனாவின் மூன்றாவது அலையை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |