Categories
அரசியல் மாநில செய்திகள்

பரபரக்கும் அரசியல் களம்…. சீமானை விட்டு விலகி…. புதிய கட்சியை தொடங்கிய மன்சூர் அலிகான்…!!

நடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பித்ததுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்க இருப்பதால் அரசிய காட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் காலம் சூடுபிடித்து வருகின்றது. இந்நிலையில் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வந்தார். பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி தமிழ் தேசிய புலிகள் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் மற்ற கட்சிக்கு தற்போது மாறிவருகின்றனர். இதையடுத்து நேற்று சீமான் சசிகலாவை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதனால் மூன்றாவது அணி உருவாகிறதா? அதிலும் சீமான் இருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் காரசாரமான பேச்சுகளை அள்ளிவிடும் மன்சூரலிகான் அக்கட்சியிலிருந்து விலகி புதிய கட்சியை தொடங்கி இருப்பதால் நாம் தமிழர் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தான் ஆரம்பிக்கும் கட்சிக்கும் நாம் தமிழர் கட்சிக்கு எந்த விதத்திலும் போட்டி கிடையாது என்று மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.

Categories

Tech |