Categories
அரசியல் மாநில செய்திகள்

மழையிலும் உற்சாக வாக்குப்பதிவு ….. வாக்குசாவடியில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது …!!

புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி வாக்குபதிவில் மழை பெய்து வருவதால் வாக்காளர்களுக்கு வசதியாக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின்  விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின்  காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக கூட்டணி வேட்பாளர் நாராயணன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதேபோல் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் , திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் உள்ளிட்ட 8 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இந்நிலையில் பரபரப்பாக நடைபெற்று வருகின்ற இடைதேர்தல் பரப்புரை முடிந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர். அதே போல புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவும் இன்று நடைபெற்று வரும் நிலையில் மழை பெய்து வருவதால் வாக்காளர்களுக்கு வசதியாக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |