Categories
மாநில செய்திகள்

Exclusive: தமிழக குடும்ப அட்டை தாரர்களுக்கு…. அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகள் மற்றும் ரேஷன் கார்டுகளில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து புகார் அளிக்க இலவச உதவி மைய எண்ணை அரசு வழங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் ரேஷன் தொடர்பான புகார்களை 18004255901 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் www.tnpds.gov.in என்ற உணவு பொருள் வழங்கல் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் உம் மக்கள் தங்கள் புகாரை பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |