ரேஷன் கார்டை நீங்கள் விண்ணப்பித்த பிறகு ஆவண சரிபார்ப்பு, துறை சரிபார்ப்பு, தாலுகா வழங்கல் அதிகாரியின் ஒப்புதல் என பல வழிமுறைகள் உண்டு. அதன்பிறகே உங்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்கும். இப்போது 15 நாளில் ரேஷன் கார்டை பெறமுடியும். அதன்படி தமிழகத்தில் ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டு கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புதிய ரேஷன் அட்டைக்கு www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் புதிய அட்டைக்கான விண்ணப்பத்தை கிளிக் செய்யவும். அதன் பிறகு அதில் கேட்கப்படும் விவரங்கள் அனைத்தையும் பதிவு செய்து குடும்ப தலைவர் போட்டோ (5 MB), இருப்பிடச் சான்றிதழ் என்ற இடத்தில் கேஸ் பில், டெலிபோன் பில் போன்றவற்றில் ஒன்றை பதிவேற்றம் செய்யவும். ஆதார் எண் கட்டாயம். நீங்கள் கொடுத்த விபரங்கள் அனைத்தும் சரி பார்க்கப்பட்டு 15 நாட்களுக்குள் ரேஷன் அட்டை வீடு தேடி வரும்.