சுமார் 7 ஆண்டுகாலம் காதலித்து வந்த விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடிக்கு நேற்று திருமணம் நடந்துமுடிந்தது. பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பிரபலங்கள் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின், ஷாருக்கான் ஆகியோர் வருகை தந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுக்க அதனை கண்களில் நீர் ததும்ப விக்னேஷ் சிவன், நயன்தாரா கழுத்தில் கட்டினார்.இதனைத் தொடர்ந்து அவர்களின் திருமண புகைபடங்கள் ஒவ்வொன்றாக சமூக வலைத் தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. அது ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில் திருமணம் முடிந்த அடுத்த நாளே திருப்பதியில் சாமி தரிசனம் செய்யச் சென்ற நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடி சர்ச்சையில் சிக்கியுள்ளனர். கோவில் வளாகத்தின் மாடவீதியில் காலணி அணிய தடை உள்ள நிலையில் நயன்தாரா காலணி அணிந்து வந்துள்ளார். மேலும் கோவில் வளாகத்தில் காலணிகளுடன் இருவரும் போட்டோ ஷூட் நடத்தியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நயன்தாரா காலணி அணிந்து வந்த வீடியோ வைரலானதை அடுத்து இது சர்ச்சையை ஆகியுள்ளது.