கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் பெரும்பாலானோர் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பலர் தங்கள் சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் தங்களிடம் இருக்கும் நகைகளை வங்கிகளில் அடமானம் வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும்பாலான வங்கிகளில் வட்டி அதிகம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு நகை கடன் வழங்குகிறது. அதாவது எஸ்பிஐ வங்கியின் யோனோ ஆப் மூலம் நகை கடனுக்கு 0.75% வட்டி தள்ளுபடி செய்யப்படும் என எஸ்பிஐ அறிவித்துள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதி வரை இந்த சலுகை கிடைக்கும் என கூறியுள்ளது. தற்போது நகை கடனுக்கு எஸ்பிஐ 8.25% வட்டி விதிக்கப்பட்டு வரும் நிலையில் 0.75% தள்ளுபடி செய்யப்பட்டு 7.5% வட்டிக்கு நகை கடன் பெறலாம் என கூறியுள்ளது.