தமிழில் கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் பாலிவுட்டில் பிரபலமானவர். அந்தாதூன், பேட்மேன், பாட்லபூர், ஸ்கேர்டு கேம்ஸ் உள்ளிட்ட பாலிவுட் படங்கள், வெப் சீரிஸ் என பல படைப்புகளில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் ஏற்கெனவே நடித்து வெளியான பார்ச்ட் திரைப்படக் காட்சியால் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார். பார்ச்ட் படத்தின் ஒரு காட்சியில் மேலாடையின்றி அவர் நடித்திருந்தார்.
அப்படம் வெளியாகி பல வருடங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது ராதிகா ஆப்தேவுக்கு எதிராக ட்விட்டர்வாசிகள் ட்ரெண்டு செய்துவருகிறார்கள். அந்தக் கதைக்கு நிர்வாண காட்சி தேவைப்பட்டது. அதனால் நடித்தேன் என ராதிகா ஆப்தே விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ராதிகா ஆப்தே போன்றவர்களால் இந்தியாவின் கலாச்சாரமும் பண்பாடும் அளிக்கப்படுகிறது. அவரை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
Bollywood always targets the ancient religion and traditions of Bharat.#BoycottRadhikaApte #BoycottRadhikaApte pic.twitter.com/Pq4BIRrNGz
— हिंदू MR मयूर रावले ✨🚩 (@I51cl4pnWwUOxpM) August 13, 2021