Categories
சினிமா

EXCLUSIVE: #பீஸ்ட் படம்… விஜய்யுடன் தல தோனி…. செம…..!!!!

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது.  அதேபோல் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி நடிக்கும் விளம்பர படப்பிடிப்பும் அதே ஸ்டூடியோவில் இன்று நடைபெற்றது.

அங்கு திடீரென்று விசிட் அடித்த சிஎஸ்கே கேப்டன் தல தோனி, விஜயுடன் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். தோனியும் விஜய்யும் சிரித்த முகத்துடன் புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை இருவரின் ரசிகர்களும் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |