Categories
சினிமா தமிழ் சினிமா

EXCLUSIVE: வாழு வாழ விடு – நடிகர் அஜித் அதிரடி அறிக்கை…!!!

நடிகர் அஜித் காதல் கோட்டை, பில்லா, மங்காத்தா உள்ளிட்ட பல பல படங்களில் நடித்துள்ளார். இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் தல என்றும் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தயத்திலும் பங்கு பெற்றுள்ளார். போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012 ஆம் ஆண்டு பட்டியலில் அஜித் குமார் 61ஆவது இடத்தினைப் பெற்றார்.

இந்நிலையில் தமிழ் திரையுலகில் 30 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதாக நடிகர் அஜித்குமார் ரசிகர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து நடிகர் அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரசிகர்கள், விமர்சகர்கள், நடுநிலையாளர்கள் என்போர் நாணயத்தின் மூன்று பக்கங்களை சேர்ந்தவர்கள். ரசிகர்களிடம் அன்பை பெறுகிறேன். வெறுப்பவர்களிடம் வெறுப்பை ஏற்கிறேன். நடுநிலையாளர்களின் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்கிறேன். வாழு வாழ விடு அன்பை வழங்குக” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |