Categories
சினிமா தமிழ் சினிமா

EXCLUSIVE: “விக்ரம்” படத்தின் மாஸ் REVIEW ….. ஆரம்பிக்கலாமா…..!!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்த திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படம் வேற லெவல் என்று கொண்டாடி வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது விக்ரம் படத்தின் ரிவியூ வெளியாகியுள்ளது. இந்த படத்தில் மாஸ்க் நபர்களால் மகனும், தந்தையான கமலும் கொல்லப்பட, அதை துப்பு துலக்கும் சீக்ரெட் ஏஜென்டாக பகத் பாசில் நடித்துள்ளார். மாஸ்க் நபர்கள் யார்? கமலுக்கு என்னாச்சு? விக்ரம் என்பது யார்? என்பதை நோக்கி படம் நகருகிறது .மேலும் போதை மாஃபியா விஜய்சேதுபதியின் வில்லத்தனம் என அதிரடி உடன் திரைக்கதை உள்ளது. கோஸ்ட் ஆக நடிகர் கமலஹாசன் மிரட்டியுள்ளார். துப்பாக்கி காதலன் லோகேஷ் கனகராஜ்க்கு கைதட்டலும் விசிலும் தியேட்டரில் பறந்தது . 1986ஆம் ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் மற்றும் கைதி கதைகளை இணைத்திருப்பது சூப்பர். அனிருத் இசை மாஸ் காட்டியுள்ளது. லாஜிக் மீறல் இருந்தாலும் பக்கா ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக விக்ரம் படம் கலக்கி உள்ளது.

Categories

Tech |