உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. ஒரு சில நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பூசி போடுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு குறைந்தது மூன்று நாட்களுக்கு உடலுறவு கொள்ள வேண்டாம் என தேசிய சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உடலுறவு வைத்துக் கொள்ளும் போது உடலில் அழுத்தம் அதிகரிக்கும். தடுப்பூசி போட்ட உடனே உடலுக்கு அழுத்தம் கொடுப்பது நல்லதல்ல என்பதால் உடலுறவை தவிர்க்க வேண்டும். மேலும் உணவு மற்றும் சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.