நாமக்கல் பகுதியில் சத்துணவு ஊழியரிடம் தவறாக நடந்ததாக கூறி ஆசிரியரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.
நாமக்கல்லில் சத்துணர்வு பெண்ணிடம் ஆசிரியர் சரவணன் என்பவர் தனிமையில் இருந்தததை மாணவர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து ஊர் பொதுமக்களிடம் இந்த தகவலை மாணவர்கள் தெரிவிக்க ஆசிரியரை சரமாரியாக தாக்கினர். பின் தாக்கப்பட்ட ஆசிரியர் சரவணனை விசாரணைக்காக புதுச்சத்திரம் காவல்துறையினர் அழைத்துச்சென்றனர். விசாரணைக்கு பிறகு அவரை காவல்துறையினர் விடுவித்துவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அப்பகுதி மக்களையும் காவல் நிலையத்திற்கு புதுச்சத்திரம் காவல்துறையினர் அழைத்தனர். இந்நிலையில் காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டதும், நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஆசிரியர் சரவணன் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார் அதே நேரத்தில் ஆசிரியர் சரவணன் மீதான குற்றச்சாட்டு உண்மையா? இல்லையா? என்பதை அறியும் வகையில் அது குறித்து விசாரணை நடத்தும்படி புதுச்சத்திரம் வட்டார கல்வி அலுவலர்கள் கோபாலகிருஷ்ணனுக்கு மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் உத்தரவிட்டுள்ளார்.