மலேசியாவில் வாழும் தமிழர் ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து 42.72 கிராம் ஹெராயின் போதைப்பொருளை தொடையில் மறைத்து வைத்து கடத்தி சென்ற நாகேந்திரன் ( 33 ) என்பவரை சிங்கப்பூர் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் மலேசியாவில் வசிக்கும் தமிழரான நாகேந்திரனுக்கு போதை பொருள் கடத்திய வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாகேந்திரனுக்கு கடந்த புதன்கிழமை அன்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நாகேந்திரனுக்கு தூக்கு தண்டனை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோ சயிஃபுதீன் மற்றும் பிரதமர் இஸ்மாயில் உள்ளிட்டோர் இந்த வழக்கு குறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டு நாகேந்திரனுக்கு நியாயமாக தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில் அனைத்து வித நடைமுறைகளும் சிங்கப்பூர் சட்டத்தின் கீழ் முறையாக பின்பற்றப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.