Categories
தேசிய செய்திகள்

BREAKING : நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை தூக்குதண்டனை கிடையாது..!!

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளுக்கு நாளை நிறைவேற்ற இருந்த தூக்குதண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது

கடந்த 2012-ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றபடுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளுக்கு நாளை நிறைவேற்ற இருந்த தூக்குதண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று டெல்லி கீழமை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது முறையாக தூக்கு தண்டனையை ஒத்தி வைத்தது டெல்லி நீதிமன்றம். முன்னதாக பவன்குமார் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. 4 குற்றவாளிகளில் அக்ஷய்க்கு மட்டும் தான் சட்ட வாய்ப்புகள் முடிந்திருக்கிறது. 3 பேருக்கு இன்னும் சட்ட வாய்ப்புகள் இருக்கும் நிலையில் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |