Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தலையில் கட்டு போட்டுக்கொண்ட நிர்வாகிகள்… பல்வேறு கோரிக்கைகள்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும், மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும் செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாக செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தாலுகா செயலாளர் சிவா தலைமை தாங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து கட்சியின் தாலுகா குழு நிர்வாகிகள் ராமசந்திரபாபு, அசோக், கருணாமூர்த்தி, தர்மபிரபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன் மற்றும் பல்வேறு நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தலையில் கட்டுப்படும் உடலில் குளுக்கோஸ் ஏற்றுவது போலும் நூதன முறையில் போராடியுள்ளனர்.

Categories

Tech |