Categories
பல்சுவை

“இறைவன் அருள்” UNLIMITED-க்கு வாய்ப்பே இல்லை….. வாட்டி வதைக்கும் எக்ஸ்பைரி தேதிகள்…!!

மனிதனின் வாழ்க்கையை recharge மூலம் உணர்த்துவதே இந்த செய்தி தொகுப்பு.

எத்தனை முறை நம் வாழ்வில் சந்தோசத்தை ரீசார்ஜ் செய்தாலும் வேலிடிட்டி எக்ஸ்பைரி என்றே இறைவன் நோட்டிபிகேஷன் அனுப்புகிறான். Jio சேவையில் வந்து அடைபட்டது எவ்வளவு பெரிய தவறு என்று ஒவ்வொரு முறை recharge செய்யும்போதும் உணர்ந்திருப்போம். மாத சம்பளத்தில் பாதியை இதற்காகவே ஒதுக்க வேண்டிய நிலை. இதில் பேசுவதற்கு தனி, இன்டர்நெட்டுக்கு தனி என பிரித்து விடுகிறார்கள்.

அனைத்துக் கம்பெனிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று நாம் அறிவோம். 90s கிட்ஸ் ஒரு மாதத்திற்கு பயன்படுத்திய ஒரு ஜிபி டேட்டா இன்று நாம் ஒரே நாளில் முடித்து விடுகிறோம். நினைத்தபோதெல்லாம் youtube வேண்டாத போது கூட வாட்ஸ்அப் இன்ஸ்டாகிராம் என அளவுக்கு மீறி ரகளை அளிக்கின்றோம். பல்லு போன கிழவி முதல் குழந்தை வரை என்று செல்போனுடன் சுற்றும் போது நம்மால் என்ன செய்ய முடியும்.

இளைஞர்கள் அதிகம் கெடுவதற்கான முதல் காரணம் இதுவே. அனைத்து வகையான நெட்வொர்க்களுக்கும் எக்ஸ்பயரி தேதி இருப்பது போல, இந்த இன்டர்நெட்க்கு வேலிடிட்டி என்ற ஒன்று உண்டு. இந்த கொடுமையான எல்லாம் தந்தை இறைவனே நமக்கு தந்துள்ளான். இந்த சந்தோஷத்தையும் குறிப்பிட்ட நாள்களுக்கு தான் தந்துள்ளார் என்பதை உணர்த்தவே  மேற்கண்ட அனைத்தும் கதைகளாக கூறப்பட்டுள்ளது.

துன்பம் வரும்போதெல்லாம் கடந்து போக நினைக்கின்றோம். சிரிக்கின்றோம். ஆனாலும் துவண்டு விடுகின்றோம். நம்பிக்கையோடு இருங்கள், நமக்கான வேலிடிட்டி தேதி முடியும் வரை நாம் சந்தோசமாக இந்த உலகில் வாழ வேண்டும் என்பதே அந்த இறைவனின் விருப்பமாக இருக்கும். 

Categories

Tech |