Categories
மாநில செய்திகள்

பிரதமரிடம் எதிர்பார்ப்பது அறிவுரை மட்டுமல்ல, உயிர்வாழ்வதற்கான நிவாரணமும் தான் – மு.க. ஸ்டாலின்!

பிரதமரிடம் எதிர்பார்ப்பது அறிவுரை மட்டுமல்ல, உயிர்வாழ்வதற்கான நிவாரணமும் தான் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். யாரும் அலட்சியத்துடன் இருக்க வேண்டாம். வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் மோடி, அத்தியாவசிய தேவைக்கு வெளியே வந்தால் தனி மனித இடைவெளி அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஆறுதல் தரும் வகையிலான உரையை பிரதமர் மோடி எப்போது ஆற்றப்போகிறார் என்றும் மக்கள் மனதில் உள்ள கேள்விகளுக்கு பதில் தரும் வகையில் மோடி எப்போது பேச போகிறார் என்றும் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மருத்துவ உபகரணங்கள் , நோய் கண்டறியும் கருவிகளை எப்போது தருவீர்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், மத்திய அரசு எடுக்கும் முடிவுகள் மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை என குற்றம் சாட்டியுள்ளார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக பிரதமரின் உரை அமைந்துள்ளது. ஆனால் பிரதமரிடம் எதிர்பார்ப்பது அறிவுரை மட்டுமல்ல, உயிர்வாழ்வதற்கான நிவாரணமும் தான்.

பிரதமர் ஆற்றிய எந்த உரையிலும் மக்களுக்கு நிவாரண உதவி அளிப்பது பற்றி அறிவிப்பு இல்லை என ஸ்டாலின் கூறியுள்ளார். ஊரடங்கால் சிதைந்து போன ஏழை மக்களை காப்பாற்ற பிரதமர் மோடி என்ன செய்யப்போகிறார் என்று கேள்வு எழுப்பிய அவர், வீட்டுக்குளே முடங்கி கிடக்கும் மக்களுக்கு மத்திய அரசு என்ன உதவி செய்ய போகிறது என்பதே எதிர்பார்ப்பு என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |