Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீங்க இப்படியும் பண்ணலாமே…. எங்க கோரிக்கையை நிறைவேற்றுங்க… எதிர்பார்ப்பில் வியாபாரிகள்…!!

அதிகாரிகளின் அனுமதியோடு கோயம்பேடு சில்லறை காய்கறி கடைகள் செயல்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழ்நாடு அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் இருக்கும் சிலரை காய்கறி கடைகள் செயல்பட தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக்குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக சுழற்சி முறையில் இன்று வரை கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்போது சில்லறை வியாபாரிகள் கடைகளை அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து சுழற்சி முறையில் கடைகளை திறந்து வைத்தால் இரண்டு கடைகளில் காய்கறி வாங்க வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களால் கூட்டம் அதிகமாகும். எனவே வியாபாரிகள் அனைத்து கடைகளையும் ஒரே நாளில் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. அப்போது திருமழிசையில் காய்கறி கடை செயல்பட்டபோது மாநகராட்சி நிர்வாகம் தொற்றை தடுக்கும் பொருட்டு பின்பற்றிய நடவடிக்கைகளை தற்போது கோயம்பேடு மார்க்கெட் சில்லறை கடைகளிலும் பின்பற்றினால் நன்றாக இருக்கும் என்று வியாபாரிகள் தங்களின் யோசனையை முன் வைத்துள்ளனர்.

Categories

Tech |