இந்தியாவுக்கு என முதல் முதலில் தேசிய கொடியை வடிவமைத்தவர் சுவாமி விவேகானந்தரின் பெண் சீடரான லிவிதிதா என்பவர் தான். 1904 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்தக் கொடியில் தேசத்தந்தை காந்தியடிகளின் விருப்பத்திற்கிணங்க இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்த பிங்கிலி வெங்கையா என்பவர் சில மாற்றங்களை செய்தார். அந்தக் கொடி 1947 ஜூலை மாதம் 22 ஆம் தேதி இந்திய அரசியல் சாசன நிர்ணய சபைக் கூட்டத்தில் ஒருமனதாக ஏற்கப்பட்டது. அப்போது ஜவகர்லால் நேரு அளித்த ஆலோசனைக்கு ஏற்ப மூவர்ண கொடியின் நிறம் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தேசிய கொடியின் மேலே உள்ள காவி நிறம் தைரியம் மற்றும் தியாகத்தின் குறிப்பிடுகிறது. நடுவில் உள்ள வெண்மை அமைதி , உண்மை , தூய்மை ஆகிவற்றை உணர்த்துகிறது. கீழே உள்ள பச்சை நிறம் நம்பிக்கை மற்றும் வீரத்தை குறிக்கிறது. கொடியின் அளவைப் பொறுத்தவரை அதன் நீள அகலம் மூன்றுக்கு இரண்டு என்ற விதத்தில் இருக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. நடுவில் இருக்கும் வெண்மைநிற பகுதியில் 24 ஆரங்கள் கொண்ட அசோகச் சக்கரம் இடம்பெறுவது என்றும் முடிவு செய்தனர்.அந்த கொடி தான் இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மூவர்ண கொடியின் பெருமையை மிகுந்த உச்சத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற வேட்கை கொண்ட இளம்பெண் ஒருவர் இந்தியாவின் உயரமான பகுதியான லடாக்கிற்கு சென்று அதனை பறக்கவிட்டார். சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் இந்த சமயத்தில் மூவர்ணக் கொடியின் பின்னணி பற்றிய சிறப்புகளை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு நாம் அனைவருக்கும் இருப்பதை மறந்து விட கூடாது.