Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய சிலிண்டர்….. பற்றி எரிந்த வீடு…. கணவன்-மனைவி படுகாயம்….. திருப்பூர் அருகே சோகம்…!!

திருப்பூர் அருகே சிலிண்டர்  வெடித்த விபத்தில் கணவன் மனைவி இருவரும் பலத்த காயம்  அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் பகுதியை  அடுத்த தொடக்கப்பள்ளி தெருவில் முதல் மாடியில் கணவன் மனைவி இருவர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் மாடியின் ஒரு பகுதியில் உள்ள ஓலைக் கொட்டகையில் மனைவி சமையல் செய்து வர கணவன் மனைவிக்கு உதவி செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென சிலிண்டர் கசிவு காரணமாக சிலிண்டரின் மேற்பகுதியில் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி தண்ணீரை எடுத்து சிலிண்டர் மீது ஊற்றவே, எதிர்பார்க்காத நிலையில் திடீரென பலத்த சத்தத்துடன் சிலிண்டர்  வெடித்து சிதறியது. இதில் கணவன் மனைவி இருவருமே பலத்த காயமடைந்தனர். ஓலைக் கொட்டகை முழுவதும் தீ பரவி மளமளவென எரிய தொடங்கியது.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் தீயை அணைத்து கணவன் மனைவி இருவரையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் காவல் நிலையத்திலும் தகவல் தெரிவிக்கப்பட விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |