ஈரான்-ஆப்கான் எல்லையில் எண்ணெய் டேங்கர் லாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் ஹெராத் மாகாணத்தின் இஸ்லாம் காலாஒரு சங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பல எரிவாயு டேங்கர் லாரிகள் வெடித்து சிதறியுள்ளது. ஒரு பெரிய தீ இன்னும் அணையாமல் எரிந்து கொண்டிருப்பதால், அதனை கட்டுப்படுத்த ஈரானிடம் உதவி கேட்டுள்ளதாக மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சில வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.இது சற்று தொலைவில் இருக்கும். இதில் ஓரிடத்தில் டேங்கர் லாரிகள் வெடித்து சிதறியதால் மக்கள் தலை தெறித்து ஓடிய வீடியோ காட்சியும் இடம்பெற்றுள்ளது. தற்போதுவரைவெடிவிபத்தில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
تصاویر جدید از آتشسوزی گسترده در گمرک «اسلام قلعه» هرات افغانستان pic.twitter.com/twSR5zwZqS
— خبرگزاری فارس (@FarsNews_Agency) February 13, 2021