பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தால் தந்தை-மகள் இருவரும் பலியான சம்பவம் உறவினர்களை சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காளையார்குறிச்சி பகுதியில் ரத்தினசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சந்திரா. சந்திராவும் அவரது தந்தை பொன்னுசாமி என்பவரும் அதே பகுதியில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் சென்ற வியாழன்கிழமை அன்று அந்த பட்டாசு ஆலையில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் சந்திரா உட்பட மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சந்திராவின் மகன் இருளப்பன் மற்றும் அவரது உறவினர்கள் சந்திராவின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் சந்திராவின் தந்தை மோசமான தீ காயங்களுடன் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து தீவிர சிகிச்சைக்குப்பின் பொன்னுசாமி பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே கிராமத்தைச் சேர்ந்த தந்தை-மகள் இருவரும் பட்டாசு விபத்தில் பலியான சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.