டர்பனில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் டர்பனில் உள்ள நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ஏங்கனில் திடீரென்று பயங்கர வெடி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது என்று அங்குள்ள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த வெடி விபத்தினால் 7 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் தற்போது அவர்கள் அனைவரும் நல்ல நிலையில் உள்ளதாக அவசர சேவை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விபத்திற்கான காரணம் குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை. வெடி விபத்து சம்பவம் நடந்த இடத்திற்கு அவசர சேவைகள் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சுத்திகரிப்பு நிலையம் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பீப்பாய்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Explosion Rocks Engen Refinery in Durban #DurbanExplosion #EngenRefinery pic.twitter.com/C0vNbZxEPM
— 𝙵𝚊𝚒𝚣𝚎𝚕 𝙿𝚊𝚝𝚎𝚕 ⚡️ (@FaizelPatel143) December 4, 2020