பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடை தொடர்ந்து குண்டுவெடிப்பு நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் காசன் நகரில் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவம் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 4 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார் இந்த சம்பவம் நிகழ்ந்தவுடன் சுமார் 20 ஆம்புலன்ஸ் குழுக்கள் பள்ளிக்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
https://twitter.com/i/status/1392020053541933066
மேலும் இந்த தாக்குதலில் 8 பள்ளி மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியை உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் இரண்டு இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த நபர்களை சட்ட அமலாக்க துறை அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் துப்பாக்கிச் சூட்டின் போது மாணவர்கள் பள்ளி கட்டிடத்தில் இருந்து குதிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.