சீனாவிலிருந்து இந்தியா மேற்கொள்ளும் இறக்குமதி இந்த ஆண்டு 13 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லை தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ரீதியாக பணி போர் மூண்டது. சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்திற்கும் இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியது. சீனப் பொருட்கள் வேண்டாம் என்று நாடு முழுவதும் குரல் எழுப்பினார்கள். சமூக வலைதளங்களில் #BoycottChineseProducts என்ற ஹேஸ்டாக் பரவலாகி பகிரப்பட்டு வந்தது. மேலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 3000 பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதேபோல் சீன மொபைல் செயலிகளுக்கும், இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.
இந்தியாவில் 2020 ஆம் ஆண்டில் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் 13 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. சீனாவின் சுங்கத் துறை வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் நவம்பர் வரையிலான 11 மாதங்களில் சீனாவிலிருந்து 59 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மட்டுமே இந்தியாவிற்கு வந்துள்ளன.
இது கடந்த ஆண்டை காட்டிலும் 13 சதவீதம் குறைவு ஆகும். அக்டோபர் வரையிலான 10 மாதங்களில் மட்டும் 16.2 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த வீழ்ச்சிக்கு காரணம் எல்லை பிரச்சனை மட்டுமல்லாமல், கொரோனா பிரச்சனை காரணமாக இந்தியா மற்றும் உலக நாடுகள் வர்த்தகம் மேற்கொள்ளத் தயக்கம் காட்டப்பட்டது. இதனால் இந்தியாவுக்கும் வர்த்தக வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்தியாவிலிருந்து அரசு இறக்குமதியும் சீனா தொடங்கியுள்ளது.