Categories
தேசிய செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து… 30 பேர் பலி…!!!

பாகிஸ்தானின் தார்கி நகரின் அருகே இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 30 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில், சிந்து மாகாணம் தார்கி நகரின் அருகே இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் சேதமடைந்தது. இதையடுத்து மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில்  சிக்கிய பயணிகளை மிகுந்த போராட்டங்களுக்கு பிறகு மீட்டனர்.  இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனால் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.  மேலும் சிலரது உடநிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என்று கூறப்படுகின்றது. இந்த விபத்து கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடைந்த அந்நாட்டு முதல்வர் இம்ரான் கான், ரெயில்வே மந்திரியை அந்த பகுதிக்கு சென்று தேவையான உதவிகளை செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |