Categories
அரசியல் மாநில செய்திகள்

வைகோ வெளியேற்றம்… காங்கிரஸ் பந்தாட்டம்… சைலண்ட் மோடில் கம்யூனிஸ்ட்கள்… வச்சு செய்த DMK ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி,  சட்டமன்றத்திலும் சரி,  அதேபோல எங்கு பார்த்தாலும் உதயநிதி ஸ்டாலின் புராணம் தான் பாடுகிறார்கள். மூத்த  அமைச்சர்கள்,  கூட்டணி கட்சிகள் அனைத்தும் உதயநிதிக்காக பேசுகின்றன.

வைகோ அவர்கள் தலைவராக உருவாகி விடுவார்கள் என்று  வெளியே அனுப்பினார்கள், எம்.ஜி.ஆரை வெளியே அனுப்பி வைத்தார்கள். கம்யூனிஸ்ட்கள் யாரும் பேசுவதில்லை. காங்கிரஸ் கட்சியையே திமுக ஸ்டாலின் பந்தாடிக் கொண்டிருக்கிறார்.

பசுமை வழிச் சாலைக்கு எதிராக அதிமுக ஆட்சியில் என்னென்ன போராட்டங்கள் நடக்கிறதோ அவை அனைத்தும் தற்போதும் நடந்து கொண்ட தான் இருக்கின்றது. எடப்பாடியார் இருக்கும்பொழுது எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் போராட்டம்.

ஆனால் இன்று மக்களைப் பற்றி கவலைப்படாமல் முழுமையாக குடும்பத்திற்கு எப்படி வருமானம் வருகிறதோ, அதை மட்டும் தான் ஸ்டாலின் பார்க்கின்றார்.அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர் அனைவரும் பாவம்.   அணைத்து வருமானமும்   ஸ்டாலின் குடும்பத்திற்கு தான் போகிறது என தெரிவித்தார்.

Categories

Tech |